தாலியை மறைத்து வாழ்ந்த சிறுமி... பிறந்தநாள் அன்று நடந்த சம்பவம் - அதிர்ச்சி பின்னணி
அரியலூரில் 16 வயது சிறுமியை காதலித்து கட்டாய திருமணம் செய்த கூலி தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டி அருகே குண்டவெளி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வசந்தன். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் பிறந்த நாளான்று அவருடம் ஆசை வார்த்தைகள் கூறி கட்டாய திருமணம் செய்து தாலி கட்டியதாக கூறப்படுகிறது. தாலியை சிறுமியும் வீட்டில் மறைத்து வாழ்ந்து வந்த நிலையில், வசந்தன் அவருடைய வீட்டிற்கு சிறுமியை அழைத்து வந்துள்ளார். அப்போது, சிறுமியின கழுத்தில் தாலியை கண்ட வசந்தனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த தகவல் ரகசியமாக போலீசார் தரப்பிற்கு தெரியவந்துள்ளது. உடனே, சம்பவ இடத்திற்கு வந்த் போலீசார் வசந்தனை போக்சோ சட்டத்தின் கீழும், அவருக்கு துணையாக இருந்த தாயார் கொளஞ்சியம்மாளையும் சேர்த்து கைது செய்தனர்.