காலில் விழுந்து கதறி அழுத பெண் - ஒரு நொடியில் நிலைமையை மாற்றிய கலெக்டர்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ரிஷிவந்தியம் அருகே உள்ள பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சந்திரகலா என்ற மாற்றுத்திறனாளி பெண் உதவித்தொகை வழங்காததால் வறுமையில் தவித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீருடன் கதறி அழுதார். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அப்பெண்ணுக்கு 6 மாத உதவி தொகையாக 6 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை 1 மணி நேரத்தில் வழங்கினார். அதனை பெற்று கொண்ட அப்பெண் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இச்சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Next Story