கரை ஒதுங்கிய ராட்சத ஆமை..அசையாமல் இருந்ததால் அதிர்ந்த மக்கள்
கரை ஒதுங்கிய ராட்சத ஆமை..அசையாமல் இருந்ததால் அதிர்ந்த மக்கள்
திருச்செந்தூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி
கோயில் அருகே அமைந்துள்ள கடற்கரையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.
முட்டையிடுவதற்காக கரை ஒதுங்கும் போது, அலையின் சீற்றத்தால் அடிபட்டு ஆமை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு கடல்
உயிரினங்கள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க மீன் வளத்துறையினருக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story