"ஒரு பிள்ளையை காப்பாற்றுவதற்குள்ள இன்னோரு பிள்ள உள்ள போயிடுச்சி" மாணவிகளை காப்பாற்றிய தோழி
- கரூரில் பள்ளி மாணவிகள் 4 பேர் ஆற்றில் முழ்கி உயிரிழந்த சம்பவத்தில், 3 மாணவிகளின் உயிரை காப்பாற்றிய பள்ளி மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 13 பேர் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு திரும்பியுள்ளனர்.
- அப்போது, கரூர் மாவட்டம் மாயனூர் அணையை சுற்றி பார்க்க இறங்கிய மாணவிகள், மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
- இதில், 4 மாணவிகள் எதிர்பாரதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவத்தில் மாணவிகள் சிலர் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி தவித்த போது, 3 மாணவிகளை சக மாணவியான கீர்த்தனா என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.
- இந்த துயர சம்பவத்தில், துணிச்சலாக செயல்பட்டு 3 மாணவிகளை மீட்ட வீரமங்கை கீர்த்தனாவின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Next Story