முதல் நாள் கூட்டம்..காங்கிரஸ் தலைவர் பரபரப்பு ட்வீட்
வெறுப்பு, பிளவு, பொருளாதார சமத்துவமின்மை, கொள்ளை போன்ற எதேச்சதிகார மற்றும் மக்கள் விரோத அரசியலில் இருந்து இந்திய மக்களை விடுவிக்க விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு, பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாக, கர்நாடக மாநிலம் பெங்களூரூவில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தில், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 20 - க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.இதில் இரண்டாவது நாள் கூட்டத்தில் என்ன ஆலோசனை செய்ய வேண்டும், நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, வெறுப்பு, பிளவு, பொருளாதார சமத்துவமின்மை, கொள்ளை போன்ற எதேச்சதிகார மற்றும் மக்கள் விரோத அரசியலில் இருந்து இந்திய மக்களை விடுவிக்க விரும்புவதாக கூறியுள்ளார். பலவீனமான மனிதர்களுக்கு நம்பிக்கையையும், எதிர்ப்பார்ப்பையும் அளித்திடும் இந்தியாவை உருவாக்கிட போவதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.