திருவிழா கொண்டாட்டத்தில் உருவான பகை...காத்திருந்து பழித்தீர்த்த அலப்பறை பாய்ஸ்....

x

தூத்துக்குடி - மூக்குப்பீறி


திருவிழா கொண்டாட்டத்தில் உருவான பகை...காத்திருந்து பழித்தீர்த்த அலப்பறை பாய்ஸ்....

5 பேருக்கு போடப்பட்ட ஸ்கெட்ச்சில், 1 கொலை...

திருவிழா முன்விரோதத்தால் கேங்க்வாரான கதை...

பல காரணங்களால் பிரிந்திருக்கும் மக்கள் எல்லாரும், பழைய பகையெல்லாம் மறந்து ஒன்னு கூட தான் சாமி பேர சொல்லி ஊர் திருவிழாக்கள் நடத்தபடுது.

ஆனா, அப்படி நடத்தபட்ட திருவிழாவுல பகை உருவாகி அது இப்ப கொலையில வந்து முடிஞ்சிருக்கு...

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூக்குப்பீறி கிராமம்.

அன்று பொழுது விடிந்தப்போது ஊரே வெறிச்சோடி கிடந்தது.

காவல்நிலையத்தை முற்றுகையிட்டவர்களிடம், 24 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உயர் அதிகாரிகள் சமாதானம் சொல்லி கொண்டிருந்தனர்.

ஆம், முன் தினம் இரவு நடந்திருப்பது ஒரு படுபயங்கர கொலை...


கொல்லப்பட்டவர் மூக்குப்பீறி கிழக்குத் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் செல்வதிரவியம்.

30 வயதான செல்வதிரவியம் மரவேலை செய்யும் ஆசாரியாக வேலை செய்து வந்திருக்கிறார்.

இவருக்கு 5 வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில், குடிப்பழக்கமிருந்ததால் ஒரே வருடத்தில் மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது,

இந்த வேலையில் தான் செல்வதிரவியம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.


நடந்த கொலையால் ஊரே அச்சத்தில் உறைந்து கிடந்த வேலையில், ஒட்டுமொத்த கிராமத்தையும் தங்களது கன்ட்ரோலுக்குள் கொண்டு வந்து காவல்துறையினர் விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறார்கள்.

செல்வதிரவியத்திற்கு ஏதேனும் முன் விரோதம் இருக்கிறதா ? என்று துப்பு துலக்கிய காவல்துறையினருக்கு ஒரு துருப்பு சீட்டு கிடைத்திருக்கிறது.

அது கடந்த மே மாதம் நடந்த தேர் திருவிழா...

ஊர் கூடி நடந்தப்பட்ட தேர் திருவிழாவில், மக்கள் தப்படித்து ஆடி ஆர்ப்பரித்து கொண்டிருந்த வேலையில், திருவிழாவுக்கு அழைப்பு விருந்தினராக வந்த ஒரு அசலூர் கும்பலும், ஊராருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருக்கிறது,

தலைகேறிய போதையிலிருந்த, அடையாளம் தெரியாத கும்பலின் ஆட்டம், பாட்டம், ஒருக்கட்டத்தில் அளவுக்கு மீறி சென்றிருக்கிறது.

அதை பார்த்த செல்வதிரவியம் அவரது நண்பர்களும், அலப்பறை பாய்ஸோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்

அப்போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி போக, ஊர் கூடிய திருவிழாவில் வீணாய் சிக்கி கொண்ட கும்பல் அடி உதைக்கு ஆளாகி, ஆள விடு சாமி என்று தலை தெறிக்க ஓட்டம் பிடித்திருக்கிறது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த கும்பலை அடையாளம் காண முற்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான், எப்படியும் சிக்கி கொள்வோம் என்ற பயத்தில், செல்வதிரவியத்தின் கொலைக்கு பொறுப்பேற்றுக்கொண்டு மனோகர், முப்பிடாதி ராஜா , கருப்பசாமி ஆகிய 3 பேர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள்.

நீதிமன்றத்தில் ஆஜரான 3 பேரிடம் விசாரணை நடத்தியதில், நடந்த கொலைகான முழுபின்னணியையும் வெளி வந்திருகிறது.

திருவிழா கூட்டத்தில், தங்களை அடித்து அனுப்பியவர்களை பழி தீர்க்க நினைத்த கும்பல், செல்வதிரவியத்துடன் சேர்த்து நான்கு பேருக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறது,

அதில், முதல் ஆளாக அந்த கும்பலிடம் சிக்கியவர் தான் செல்வதிரவியம்,

சம்பவ நாளன்று, இரவு 8 மணி அளவில் செல்வதிரவியம் நாசரேத் பஜார் பகுதிக்கு சென்று குடித்திருக்கிறார். தலைகேறிய போதையில் வீடு திரும்பியவரை, ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் வைத்து, கனகட்சிதமான தீர்த்துகட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சரணடைந்த மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்