மகன் தள்ளிவிட்டதால் போதையில் இருந்த தந்தை மரணம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மகன் தள்ளி விட்டதால், மதுபோதையில் இருந்த தந்தை கீழே விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலராமன் சேர்த்தி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், தனது மனைவியிடம் மதுபோதையில் சண்டை போட்டுள்ளார். இதனால், ஏன் குடிக்கிறீர் என்று மகன் டேவிட் கேட்டதால், சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, டேவிட் தள்ளிவிட்டதால், கீழே விழுந்த சுரேஷ் தலையில் அடிபட்டு சம்பவட இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டேவிட்டை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
Next Story