மகளின் உடலை பைக்கில் எடுத்து சென்ற தந்தை - எதேச்சையாக சந்தித்த ஆட்சியர் செய்த செயல்
மருத்துவமனை ஆம்புல9ன்ஸ் வசதி செய்து தர மறுத்ததால் இறந்த மகளின் உடலை பைக்கில் வைத்து எடுத்து வந்த தந்தைக்கு ஆட்சியர் உதவி செய்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் கோட்டா கிராமத்தில் வசிப்பவர் லக்ஷ்மன் சிங். இவரது மகள் மாதுரி ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு, ஷாஹ்டோலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அந்த மருத்துவமனை 15 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள இடங்களுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து தந்தை லக்ஷ்மன் சிங், தன் 13 வயது மகள் மாதுரியின் உடலை பைக்கில் சுமந்து வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். பணம் இல்லாததால் அவரால் தனியார் வாகனமும் ஏற்பாடு செய்ய இயலவில்லை. இந்நிலையில், வேறொரு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த ஆட்சியர் வைத்யா, எதேட்சையாக இவர்களைக் கண்டு வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளார். உண்மை நிலவரம் தெரிய வரவே, சிறுமியின் சடலத்தை எடுத்துச் செல்ல வேறொரு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளார். அத்துடன் அக்குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கியதுடன், ஆட்சியர் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்