ரவுடிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல்... தம்பி கொலைக்கு பழி வாங்கிய பிரபல ரவுடி ...?
தடயங்களை சேகரித்துக் கொண்ட போலீசார் விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்டவர்கள் புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் அன்பரசன் என்பது தெரிய வந்திருக்கிறது இதில் அருண் என்ற பெயர் போலீஸ் ரெக்கார்டுக்கு புதிதில்லை. புதுச்சேரியே அறிந்த பிரபல ரவுடி தான் இவர்.சில வருடங்களுக்கு முன்னதாக ஒரு கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று மயிலம் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடுவதற்காக தனது நண்பரான அன்பரசனோடு பைக்கிள் சென்றிருக்கிறார் அருண். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தவர்களை, ஒரு மர்ம கும்பல் வழி மறித்து தாக்கி இருக்கிறது. சூழ்நிலையை புரிந்து கொண்ட ரவுடிகள் இருவரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள பக்கத்தில் இருந்த வயல் வெளிக்கு தப்பி ஓடி இருக்கிறார்கள். ஆனால் கொலை வெறியில் இருந்த அந்த கும்பல் அவர்களை விடாமல் ஒரு கிலோ மீட்டார் தூரம் வரை துரத்திச் சென்று வெட்டி இருக்கிறது. முதல் வெட்டில் நிலைகுலைந்து விழுந்த இருவரையும், அந்த கும்பல் சாகும் வரை சரமாரியாக வெட்டி சரித்து விட்டு தப்பி ஓடி சென்றிருக்கிறது
இருவரும் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களது காவல் நிலைய ரெக்கார்டுகளை போலீசார் புரட்டிப் பார்த்திருக்கிறார்கள்.அப்போது தான் 3 வருடங்களுக்கு முன்னதாக புதுச்சேரியையே உலுக்கி ஒரு இரட்டை கொலையில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆம்....ஊருக்கு மத்தியில் இருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்...புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியைச்சேர்ந்த அருணுக்கும் , தமிழகபகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடியான முகிலன் என்பவருக்கும் இடையே பல காலமாக பகை இருந்து வந்திருக்கிறது. முகிலனும் அவனது கூட்டாளிகளும் அடிக்கடி மது அருந்துவதற்காக பிள்ளையார்குப்பம் பகுதிக்குச் செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் மது அருந்தச் சென்ற முரளிக்கும் , லோக்கல் ரவுடியான , அருணுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.அந்த மோதலில் முகிலன் தப்பி ஓடிவிட அவரது பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார் அருண். இதனால் இரு தரப்புக்குமான பகை கொழுந்துவிட்டு எரிய தொடங்கி இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக பிள்ளையார் குப்பத்திற்கு உள்ளே புகுந்த முகிலனின் அடியாட்கள் , கையில் கத்தியோடு ஊருக்குள் ரகளை செய்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அருணின் ஆதரவாலர்கள் ரகளையில் ஈடுபட்ட முரளி மற்றும் சந்துரு என்ற இருவரை மடக்கி பிடித்திருக்கிறார்கள், வசமாக சிக்கிய இருவரையும் உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். அந்த கொடூர தாக்குதலில் முரளியும் சந்துருவும் பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட முரளி வேறு யாரும் இல்லை.... ரவுடி முகிலனின் சொந்த தம்பி..... இதனால் தம்பியின் கொலைக்கு பழிவாங்க அருணையும் அன்பரசனையும் முகிலன் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.முழுவிசாரனைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.