மில்லி உள்ளே போனதும் பச்ச குழந்தையாக மாறிய மதுப்பிரியர்.. பாவப்பட்ட போலீஸின் புது ட்ரீட்மெண்ட்

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஊருக்கு செல்ல பணம் இல்லை எனக்கூறி, அரசு பேருந்து முன்பு படுத்துக்கொண்டு மதுப்பிரியர் கூட்டிய அலப்பறை பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

விழுப்புரம் மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. செஞ்சியில் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததாக தெரிகிறது...

முழு மதுபோதையில் இருந்த பழனி, தனது ஊருக்கு செல்ல வந்தவாசி பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக, பேருந்து மாறி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி செல்லக்கூடிய பேருந்தில் ஏறியிருக்கிறார்...

ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி, இறங்கிய இடம் தெரியாமல் மதுபோதையில் விழி பிதுங்கியதோடு, திடீரென அங்கிருந்து கிளம்பிய அரசு பேருந்து முன்பு படுத்துக்கொண்டு அலப்பறை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது...

வந்தவாசி செல்வதற்கு பதிலாக ஆரணிக்கு வழி மாறி வந்துவிட்டதாகவும், வரும்போது பேருந்தில் நன்கு தூங்கிவிட்டதால் தனது பணததை யாரோ திருடி விட்டார்கள் என மதுபோதையில் அவர் பேசியதை, அங்கிருந்த அனைவரும் சந்தேகத்துடனே ஏறிட்டு பார்த்துள்ளனர்...

சில மணி நேரங்களிலே ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசாரிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி பணம் பெறும் நோக்கிலே பேசிக்கொண்டிருந்த அவர், வந்தவாசி செல்வதற்கு டிக்கெட் எடுத்து கொடுத்தால் போதுமா எனக்கேட்டதற்கு மழுப்ப ஆரம்பித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்