சிகிச்சைக்கு சென்ற ஓனர் இறந்தது தெரியாமல் 3 மாதமாக மருத்துவமனை முன் காத்திருக்கும் நாய்.. சேலத்தையே உருக வைக்கும் பாசப்போராட்டம்

x

சிகிச்சைக்காக சென்ற உரிமையாளர் உயிரிழந்து 3 மாதங்களாகியும், இதையறியாது, அவரின் செல்ல நாய் சேலம் அரசு மருத்துவமனையிலேயே காத்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக நோயாளி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டார்... அவரது நாயும் நோயாளியுடனே வந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவுக்குள் கொண்டு செல்லப்பட்ட நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்... உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது... இதையறியாத அந்த நாய், தன் உரிமையாளர் எப்போது வெளியே வருவார் என அவசர சிகிச்சை பிரிவின் முன்பாகவே 3 மாதங்களாகக் காத்துக் கிடக்கிறது... அங்கு பணியில் உள்ள ஊழியர்கள் விரட்டி விட்டாலும் நாய் அந்த இடத்தை விட்டு நகர மறுக்கிறது... இரக்கப்பட்டு ஊழியர்கள் அவ்வப்போது நாய்க்கு உணவு வழங்கி வருகின்றனர். உரிமையாளர் இறந்தது தெரியாமல் வழிமீது விழி வைத்து காத்திருக்கும் இந்த ஐந்தறிவு ஜீவனின் பாசப்போராட்டம் காண்போரைக் கண் கலங்கச் செய்கிறது.


Next Story

மேலும் செய்திகள்