நாட்டையே நடுங்க விட்ட 'ஸ்மார்ட்போன்' மரணம்.. வெடிக்கும் முன் போன் காட்டும் அறிகுறிகள்..?அப்போதே உஷார் ஆயிடுங்க..தூக்கி போட்ருங்க

x

கேரளாவில் செல்போன் வெடித்து சிதறியதில் 8 வயது சிறுமி பலியான நிலையில் இதுபோன்ற துயரங்களை எப்படி தவிர்ப்பது என்பதை காணலாம்..

இன்றைய இயந்திரதனமான வாழ்வில் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகள் கையில் செல்போனை கொடுத்து சமாளிப்பது சர்வ சாதாரணமாக விட்டது. இது குழந்தைகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கும் என எத்தனை எச்சரிக்கையை வல்லுநர்கள் வைத்தாலும், குழந்தைகள் போனோடு விளையாடி, உறவாடுவது அதிகரித்துத்தான் செல்கிறது.

இப்படியொரு சூழல் அவர்களது உயிருக்கு உலையாகிறது என்பது சமூகம் வேதனைப்பட வேண்டிய விஷயம். கேரள மாநிலம் திருவில்வாமலையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி ஆதித்யஸ்ரீ, செல்போன் வெடித்து சிதறிய பரிதாபம் நாட்டையே அதிர்ச்சியுற செய்திருக்கிறது.

செல்போன் வெடித்ததும் கை, முகம் சிதைந்த அந்த சிறுமியின் வேதனை எத்தனை கோரமாக இருந்திருக்கும் என்பதனை நினைத்துகூட பாக்க முடியாது என சொல்லலாம்...

செல்போன் வெடித்ததால் உயிரிழப்பு நேரிடுவது இது முதல்முறையல்ல... இதுபோன்ற பல செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த வருடம் உத்தரபிரதேச மாநிலத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை உயிரிழந்த பயங்கரம் அரங்கேறியது.

இதனை தவிர்க்க குழந்தைகளிடம் அதிகநேரம் செல்போனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும், குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை என்றே மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மறுபுறம் செல்போன் பேட்டரிகள் லைப் சில காலமே எனச் சொல்லும் செல்போன் பழுது பார்க்கும் அசன், எப்போது செயலிழக்க தொடங்குகிறதோ அப்போதே அதனை பயன்படுத்துவதை தவிர்க்கச் சொல்கிறார்


Next Story

மேலும் செய்திகள்