நீங்காத இடம் பிடித்த கவிஞர் வாலி மறைந்த தினம் இன்று.

x

15,000 பாடல்கள் எழுதி, தமிழ் திரைபட வரலாற்றில்

நீங்காத இடம் பிடித்த கவிஞர் வாலி மறைந்த தினம்

இன்று.

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வாலி, 1931ல் ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். சென்னை ஓவியக்கல்லூரி யில் ஓராண்டு ஓவியக்கலை பயின்ற பின், திரைபட பாடலாசிரியராக உருவெடுத்தார்.

1958ல் அழகர் மலைக்கள்ளன் என்ற திரைபடத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் விடுதலைக்காக போராடும் அடிமைகளின் குரலாக அவர் எழுதிய பாடல் இன்றும் பிரபலமாக உள்ளது.


மாணவர்களுக்கு நல்லறிவு புகட்டும் புகழ் பெற்ற

பாடல்

இளையராஜாவின் வரலாற்றை வாலியின் வரிகள் மூலம்

பாரதிராஜா காட்சிபடுத்திய அபாரமான பாடல் :

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமலஹாசன் சொந்த

குரலில் பாடிய ஹிட் பாடல் :

தளபதி படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதினார்.



தர்மத்தின் தலைவன் படத்தில் சகோதர பாசத்தை

அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல் :


சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட

புத்தகங்களை எழுதியுள்ளார். சத்யா, ஹேராம், பார்த்தாலே

பரவசம், பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

2007ல் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி, ஐந்து முறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றார்.

அற்புதமான திரைபட பாடல்கள் மற்றும் கவிதைகள் மூலம் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் வாலி மறைந்த தினம், 2013 ஜூலை 18.


Next Story

மேலும் செய்திகள்