விடாத காதலனின் சாபம்.. 10 ஆண்டுக்கு பின் சிக்கிய காதலி
திருமணம் மீறிய உறவில் காதலனை கொலை செய்துவிட்டு 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த காதலியை, போலீசார் கைது செய்தனர்.
மாங்காடு அடுத்த பத்ரிமேடு பகுதியைச் சேர்ந்த ராதிகாவுக்கு திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த அபிமன்யு மற்றும் பாபு ஆகியோருடன் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது. பாபு மற்றும் அபிமன்யு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு, அபிமன்யுவை ராதிகா தனது வீட்டிற்கு அழைத்து மது அருந்தச் செய்துள்ளார். அதன்பிறகு, ராதிகா மற்றும் பாபு இணைந்து அபிமன்யுவை கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்த நிலையில், பாபு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராதிகாவை, ஆந்திராவில் வைத்து மாங்காடு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
Next Story