இறைவன் ஏசுவை பார்க்க உண்ணாவிரதம் இருக்க சொன்ன கொடூர பாதிரியார் - 90 பேர் பலி.. 213 பேரின் கதி என்ன?
கென்யாவில் ஏசுவைக் காண உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று பாதிரியார் ஒருவர் சொன்னதைக் கேட்டு அன்னம், ஆகாரமின்றி பட்டினி கிடந்து பலியானவர்கள் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது...
மாலிண்டி நகரில் பால் மெக்கன்சி என்ற பாதிரியார் கூறியதன் பேரில் பொதுமக்கள் பலர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். முதற்கட்டமாக 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மெக்கன்சியின் பண்ணையில் இருந்து தற்போது வரை 90 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாலிண்டி நகரில் 213 பேரைக் காணவில்லை என செஞ்சிலுவைச் சங்கம் புகாரளித்த நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Next Story