காதலித்து ஏமாற்றி கருவை கலைக்க முயன்ற கொடூரன்! - போலீசிடம் தஞ்சம் அடைந்த இளம்பெண்..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூரை அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண், ஐயங்கார்குளம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
அவரை பொறியியல் பட்டதாரியான பிரவீன் குமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பிரவீன் குமார் நெருங்கி பழகிய நிலையில் இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.இந்நிலையில் பிரவீன் குமார் தனதுஉறவினருடன் சேர்ந்து கர்ப்பத்தை கலைக்க முயன்றால் ஏமாற்றப்பட்ட இளம்பெண் காவல்நிலையத்தில்
புகார் அளித்தார். இதையடுத்து காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்தனர்.
Next Story