கிணற்றை காணவில்லை என சொன்ன கவுன்சிலர்.. கடுப்பில் ஊழியர்களை திட்டிய அமைச்சர் தா.மோ. அன்பரசன்

x

உயரதிகாரிகள் சொல்லும் பணிகளை சரியாக செய்யமுடியாத ஊழியர்கள் வேறு இடத்திற்கு சென்றுவிடுங்கள் என அமைச்சர் தா.மோ அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாம்பரம் மாநகராட்சியில் அளிக்கும் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது. அப்போது பெருங்களத்தூர் 56-வது மாமன்ற உறுப்பினர் சேகர் தங்களது பகுதியில் உள்ள கிணற்றை காணவில்லை என அமைச்சர் முன்னிலையில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெருங்களத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அங்கு கிணறு இருந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்டியுள்ளதாவும் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய, அமைச்சர் தா.மோ அன்பரசன் உயரதிகாரிகள் சொல்லும் பணிகளை சரியாக செய்யமுடியாத ஊழியர்கள் வேறு இடத்திற்கு சென்றுவிடுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்