மலை கிராமத்திற்கு விசிட் அடித்த கலெக்டர்...தரையில் அமர்ந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி அசத்தல்

x

திருப்பத்தூர் ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் சமீபமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்தில் சுமார் 25 மலைகிராமங்களில்அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று நேற்று முழுவதும் மலைகிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அத்துடன், தரையில் அமர்ந்து மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை கற்பித்தார். இரவு அங்கன் வாடி மையத்தில் தங்கிய அவர் அதிகாலை முதல் மீண்டும் தன் ஆய்வை தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று அனைத்து இடங்களையும் பார்வையிட்டு குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், பேக்கரிகள் மற்றும் மளிகை கடைகளில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப் படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்த அவர், நெகிழி பைகளை பறிமுதல் செய்து மஞ்சள் பைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தினார். தொடர்ந்து சென்றாயன்சாமி கோயிலில் மலைகிராம மக்களுடன் சாமி தரிசனம் செய்த அவர், உணவு ஏற்பாடு செய்து மலை கிராம மக்களுக்கு உணவு வழங்கி தானும் அவர்களுடன் இணைந்து உணவுண்டார். ஆட்சியரின் செயலால் கிராம மக்கள் மனம் நெகிழ்ந்து போயினர்.


Next Story

மேலும் செய்திகள்