வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை..... மூச்சு திணறி துடிக்க துடிக்க போன உயிர்... சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வாளியில் இருந்த தண்ணீரில் கவிழ்ந்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்குளவேலி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் துபாயில் வெல்டராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்கிற மனைவியும் 9 வயதில் ஒரு மகனும் இரண்டு வயதில் ஒரு மகனும் இருந்தார். முத்துகிருஷ்ணனின் இரண்டாவது மகன் இரண்டு வயதான துருவன் என்பவர் பாத்திரத்தில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரில் விளையாடிய போது, அதில் தலைகுப்புற கவிழ்ந்த விழுந்தார். தாய் கீதா இதனை கவனிக்காததால், மூச்சு திணறி உயிரிழந்தான். சிறிது நேரம் கழித்து வந்த தாய் கீதா, கவிழ்ந்து கிடந்த மகனை தூக்கி கொண்டு மருத்துவமனை சென்ற போது,மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அரித்துவரா மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.