உதயநிதியை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்ட முதலமைச்சர் | udhayanidhi stalin | thanthi tv
பிறந்தநாள் கொண்டாடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரும், தனது தந்தையுமான மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது தந்தைக்கு பொன்னாடை போர்த்திய உதயநிதி ஸ்டாலின், தனது தாயார் துர்கா ஸ்டாலினிடமும் வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மகன் உதயநிதியை பாசத்துடன் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story