மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு செக் வைத்த "செக்".. சிறை.. கெடு.. அதிர்ச்சி கொடுத்த கோர்ட்
பண மோசடி வழக்கில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளரான கருணாகரன், நாராயணமூர்த்தி என்ற தொழிலதிபரிடம் 7 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதன்பின்னர் கொடுக்க வேண்டிய தொகைக்கு, 3 காசோலைகளை கருணாகரன் வழங்கியுள்ளார். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாததால், கருணாகரன் அளித்த காசோலைகள் திரும்பி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாராயணமூர்த்தி, கருணாகரன் மீது திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில், பண மோசடி தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் வழக்கினை விசாரித்த நீதிமன்றம், கருணாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் 7 லட்ச ரூபாயை 30 நாட்களுக்குள் நாராயண மூர்த்திக்கு வழங்கவும், நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
Next Story