ரெஸ்ட் எடுக்காத மேகங்கள்... 4 நாட்களுக்கு தொடரும் மழையின் இன்னிங்ஸ்... செம ஆட்டம் இருக்கு மக்களே..!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வரும் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
வரும் 16ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய அந்தமான் கடலிலும்,
வரும் 17ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலிலும்,
மற்றும் வரும் 18ம் தேதி, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலிலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்...
Next Story