டெலிவரி பாயான Zomato சி.இ.ஓ! - ஏன் இந்த முடிவு..? நடந்தது என்ன?

x

டெலிவரி பாயான Zomato சி.இ.ஓ! - ஏன் இந்த முடிவு..? நடந்தது என்ன

சொமேட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ உணவு டெலிவரி செய்து வருவதை வழக்கமாக கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்திய சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியரால், சொமேட்டோ நிறுவனத்திற்கு எதிரான ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி அந்த நிறுவனத்தை கலங்க வைத்திருந்தது.

ஆனால் இன்றோ சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ குறித்து வெளியாகியுள்ள தகவலால் மீண்டும் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது, சொமேட்டோ.

சொமேட்டோ நிறுவானத்தின் சிஇஓ மூன்று மாத்திற்கு ஒரு முறை உணவு டெலிவரி பாயாக களத்தில் களமிறங்கி வருவதாக வெளியாகிய செய்தி தான் அது.

இந்த தகவலை வெளியிட்டவர், Naukri.com-யின் நிறுவனர், சஞ்சீவ் பிக்சந்தனி

சொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயலுடன் தான் உரையாடிய போது, அவர் தம்மிடம் இந்த தகவலை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

தீபிந்தர் மட்டுமல்ல... சொமேட்டோவின் தலைமை மட்டத்தில் உள்ள பல நிர்வாகிகளும் இது போல் டெலிவரி பாயாக பயணிப்பது வழக்கமாம். இந்த நடைமுறையை கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் கடைபிடித்து வருகிறார் களாம்.

வாடிக்கையாளர்களின் நிறை குறைகள் அறிந்து கொண்டு அவர்களுடன் நெருக்கமாக பயணிக்க இந்த முறை அவர்களுக்கு கைகொடுப்பதோடு, தங்கள் பிசினஸை அடுத்தக்கட்டம் நோக்கி நகர்த்தவும், திட்டமிடவும்... இது பெரிதும் உதவுகிறதாம்.

இத்தோடு, சிவப்பு நிற சொமேட்டோ சீருடையுடன் தாம் வலம் வரும் போது கிடைக்கும் உணர்வே வேறு என கூறியுள்ள தீபிந்தர், இது வரை தம்மை பொதுமக்கள் யாரும் அடையாளம் கண்டு கொண்டதில்லை என்றும் தெரிவித் துள்ளார்.

இப்படி ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓவே வாடிக்கையாளர் களுக்கு நேரடியாக சென்று உணவு டெலிவரி செய்து வரும் செய்தி கேட்டு, பலரும் அவரின் நிர்வாக திறமை மற்றும் எளிய நடைமுறையை இணையத்தில் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்