வரலாற்று சிறப்புமிக்க டெல்லி ராஜபாதை பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு
டெல்லி ராஜ்பாதை 'கர்தவ்யா பாதை' என பெயர் மாற்றம் செப்.8ம் தேதி பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக தகவல்.
டெல்லி ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டா தோட்டப் பகுதிகளின் பெயர்களை 'கர்தவ்யா பாதை' என மாற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய பெயரை ஏற்றுக்கொள்வதற்காக டெல்லி முனிசிபல் கவுன்சில் செப்டம்பர் 7ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தை கூட முடிவு செய்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்த ராஜபாதையை செப்டம்பர் எட்டாம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
Next Story