அண்ணாமலை மீதான வழக்கு.. திமுக எம்பி டி.ஆர்.பாலு வாக்குமூலம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வாக்குமுலம் அளித்தார்.
அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த டிஆர்பாலுவின் மனு, மாஜிஸ்திரேட்டு அனிதா ஆனந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக பொருளாளர் டி.ஆர். பாலு ஆஜராகி வாக்கு முலம் அளித்தார். இந்த வழக்கை அவருடன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி. வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வந்து இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கை அண்ணாமலை சந்திக்க வேண்டும் என்றும் பயந்து போய் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்க கூடாது என்றார்
Next Story