வேட்பாளர் மகள் நெற்றியில் இறங்கிய புல்லட்.. திரும்பும் திசையெல்லாம் சடலங்கள் - ஓடும் ரத்த ஆறு.. மரண பூமியான மே.வங்கம்

x

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் மோதல், குண்டு வீச்சு, துப்பாக்கி சூடு, கல்வீச்சு போன்ற சம்பவங்களால் வாக்குச்சாவடிகள் போர்க்களமாக மாறின.

மேற்கு வங்கத்தில் 73 ஆயிரத்து 887 உள்ளாட்சி இடங்களுக் கான வாக்குப்பதிவு நடைபெற்றது

திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என அரசியல் கட்சி தொண்டர்கள் ஆங்காங்கே மோதலில் ஈடுபட தேர்தல் களம் வன்முறை களமாக மாறியது.

வடக்கு தினாஜ்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் துப்பாக்கி சூட்டில் உயிரிந்தார்.

கூச் பெகாரில் மோதலில் பாஜக ஏஜெண்ட் ஒருவர் கொல்லப்பட்டார்

ஹூக்ளி மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரது மகள் நெத்தியில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்...

மாநிலம் முழுவதும் பல இடங்களில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு சம்பவங்கள் பதற்றத்தை அதிகரித்தது

வன்முறை சம்பவங்களில் மண்டை உடைந்த வண்ணமும், காயம் அடைந்தும் பலரும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

வன்முறைக்கு மத்தியில் பொதுமக்களே வாக்குச்சாவடியை சூறையாடிய சம்பவமும் அரங்கேறியது.

வாக்குப்பெட்டியை இளைஞர் தூக்கி சென்ற வீடியோ காண்போரை திகைக்க செய்தது..

வாக்குச்சீட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

ஹூக்ளியில் திரிணாமுல் காங்கிரசார்- பாஜகவினர் மோதலில் ஈடுபட ஆத்திரம் அடைந்த மக்கள், வாக்குப்பெட்டியை குளத்திற்குள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலவரத்தால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் வாக்குப்பெட்டிக்குள் தண்ணீரை ஊற்றிய செயலும் அரங்கேறியது.

வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடர, கொல்கத்தாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்...

தெற்கு பர்கானஸ் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் வெடிகுண்டு வெடித்ததாகவும் தகவல் வெளியாகியது.

மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்களில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவை சேர்ந்தவர்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தேர்தல் களம் வன்முறை களமாக மாறியதற்கு பாஜகதான் காரணம் என திரிணாமுல் காங்கிரசும், திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என பாஜகவும் குற்றம் சாட்டியிருக்கிறது.

மத்திய படை பாதுகாப்பை உறுதி செய்யவில்லை, மத்திய படைகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மாநில போலீஸ் வாக்களிக்க வந்த மக்களையும் தாக்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

வன்முறை காட்சியெல்லாம் பார்க்கும் பலரும்... தேர்தல் நடத்துவது குத்தமாயா என அதிர்ச்சி தெரிவித்து வருகிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்