தங்கையை காதலித்தவரை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் புதைத்த கொடூரம் - அண்ணன் கொடுத்த பகீர் வாக்குமூலம்
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் இளைஞரைக் கொலை செய்து ஆற்றில் புதைத்த சம்பவத்தில் 2 பேரை போலீசர் கைது செய்தனர்.
நீடாமங்கலம் முல்லைவாசலைச் சேர்ந்த திருமாவளவனை காணவில்லை என்று அவருடைய பெற்றோர், நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், திருமாவளவனின் உடல், முல்லை வாசல் கோரையாற்றில் புதைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், நீடாமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமாவளவனின் நண்பரான ஸ்ரீதர், ஸ்ரீதரின் மைத்துனர் சபரிநாதன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, சபரிநாதனின் தங்கையை சிறுவயதில் இருந்தே திருமாவளவன் காதலித்து வந்த நிலையில், தங்கையை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்த பிறகும் அவருடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதரும், ஸ்ரீதரின் தங்கை கணவரான சபரிநாதனும் சேர்ந்து திருமாவளவனைக் கொலை செய்து, உடலை கோரையாற்றில் புதைத்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.