4 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்.. உடந்தையாக இருந்த மனைவி - பிரேத பரிசோதனையில் அம்பலம்

திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
x

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் 4 வயது மகள், வடமதுரை அருகே உள்ள ராஜேஷ்குமார் மற்றும் கீர்த்திகா வீட்டிற்கு, உறவினராக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் சிறுமி வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாக கூறி, அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீஸ் விசாரணையில் சிறுமிக்கு சூடு வைத்து கீழே தள்ளிவிட்டதால் உயிரிழந்தார் என்று கீர்த்திகா வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார் மற்றும் கீர்த்திகாவை கைது செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால், உயிரிழந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இந்த நிலையில், ராஜேஷ்குமார் மற்றும் அவரது மனைவி கீர்த்திகா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்