2வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தி கிணற்றில் வீசி சென்ற கொடூர சம்பவம் -நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

x

கோவையில் 2 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தி கொலை செய்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், பீளமேடு விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி, கோவையைச் சேர்ந்த 2 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தி கொலை செய்து, உடலை கிணற்றில் வீசி சென்றார். பின்னர், தலைமறைவான ரகுநாதன் மீது, கொலை மற்றும் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ரகுநாதனுக்கு குழந்தையை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டு குழந்தைக்கு அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்