இரவில் திடீரென '100-க்கு' அழைத்த மணப்பெண்.. உடனே விரைந்த போலீஸ்..பெற்றோர் ஷாக் - அடுத்து நடந்த வித்தியாசமான சம்பவம்
கடையநல்லூர் அல்லிமூப்பன் தெருவை சேர்ந்த பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரத்தில், வெள்ளிக்கிழமை இரவு அவசர போலீஸ் 100-க்கு அழைத்த மணப்பெண், தனக்கு பெற்றோர் கட்டாயத் திருமணம் செய்து வைக்க இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார், மணப்பெண் வீட்டிற்கு அவரிடம் விசாரித்தபோது, வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை தாம் விரும்புவதாகவும், அவர் இரண்டு நாட்களில் ஊர் வந்து விடுவதாகவும் கூறியுள்ளார். அதுவரை தன்னை பெற்றோரிடம் அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து காவல் ஆய்வாளர் ஜெயலெட்சுமி, அந்த பெண்ணை தென்காசியில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Next Story