கதவை உள் பக்கமாக தாழிட்டு அலறிய சிறுவன்...பதறிய பெற்றோர் - பரபரப்பு காட்சி

x

கதவை தாழிட்டுக் கொண்டு திறக்க முடியாமல் தவித்த சிறுவனை, 10 நிமிடத்தில் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.சென்னை, அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீ கிருஷ்ணன் என்பவரின் மகன் விது. இன்று காலை சிறுவனான விது, படுக்கையறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டான். பின்னர், கதவை திறக்க முடியாத சிறுவன் அழுது கூச்சலிட்டதைக் கேட்ட குடும்பத்தினர், கதவை திறக்க முயன்றுள்ளனர். குடும்பத்தினரின் முயற்சி கைகொடுக்காததால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சுமார் 10 நிமிடத்தில் சிறுவனை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அதிர்ச்சியில் அழுது கொண்டிருந்த சிறுவனை, தீயணைப்பு வீரர்கள் தூக்கி கொஞ்சி விளையாடி ஆசுவாசப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்