மண்டை உடைந்து ஊற்றிய ரத்தம்.. கல்லால் அடித்த கொடூரம்... - திருப்பத்தூரில் பயங்கரம்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், பத்மா தம்பதியினருக்கு திருமணமாகி 16 வயதில் நாகராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பத்மா தனது மகனுடன் மாமியார் வீட்டின் அருகே வசித்து வந்த நிலையில், பத்மாவின் மகன் நாகராஜ், தனது சித்தப்பா வீட்டின் அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிறுவனின் பாட்டி மற்றும் சித்தப்பா உள்ளிட்டோர், இது குறித்து பத்மாவிடம் கேட்ட போது, இரு தரப்பினரும் கற்கள் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில், 3 பெண்கள் உட்பட 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்