நன்றி உணர்வில் ஆறறிவு மனிதனையே விஞ்சிய ஐந்தறிவு ஜீவனான பறவை - "அன்று செய்ததை இன்றும் மறக்கவில்லை"

x

உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தை சேர்ந்த ஆரிஃப், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வயலில் கால் முறிந்து கிடந்த நாரையை மீட்டு சிகிச்சை அளித்துள்ளார்.

அந்த நாரை குணமாகும் வரை தனது வீட்டில் அதனை வைத்து, உணவளித்து வந்துள்ளார்.

இப்படி அன்று தனக்கு உதவிய ஆரிஃப்பை விட்டு பிரிய மனமின்றி, அவருடன் அவர் வீட்டிலேயே வசித்து வரும் நாரை, ஆரிஃப் எங்கு சென்றாலும்... அவரை பின் தொடர்ந்து பறப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

இப்படி ஆரிஃபை நிழல் போல் பின் தொடரும் நாரையையும்... அவர்கள் இருவருக்கும் இடையேயான நட்புறவையும் கண்டு வியக்கின்றனர், மக்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்