பித்து பிடித்து அலைய விட்ட பியூட்டி பார்லர் மோகம்.. ஸ்ட்ரிக்ட்டாக 'No' சொன்ன கணவன் - உயிரையே மாய்த்த மனைவி

x

பியூட்டி பார்லருக்கு செல்ல விடாமல் கணவர் தடுத்த காரணத்தால் ஒரு பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது... நடந்தது என்ன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

அழகு... இந்த வார்த்தை எதை வைத்து அளவீடு செய்யப்படுகிறது? நிறத்தை வைத்தா?... எடையை வைத்தா?...நிச்சயமாக இல்லை...

உலகில் உருவான அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு விதத்தில் அழகுதான்... இயற்கையாக கிடைத்த அழகை அனுபவிக்கத் தெரியாத மனிதர்கள், வனப்பைத் தேடி செயற்கையாய் பியூட்டி பார்லருக்குப் படையெடுக்கின்றனர்...

இந்த "அழகு" என்னும் மோகம் ஒரு மனிதரை எந்த எல்லையில் கொண்டு போய் நிறுத்துகிறது என்றால்... தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு...

ஆம்... அப்படி ஒரு சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது...

இந்தூரைச் சேர்ந்த 34 வயது பெண் தான் ரீனா யாதவ்... இவருக்கும் பல்ராம் யாதவ் என்பவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் உருண்டோடி விட்டன...

கணவர் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார்... வரதட்சணை கேட்கிறார்... குடித்து விட்டு துன்புறுத்துகிறார்... பிறந்த வீட்டிற்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறார்... என பல காரணங்களுக்காக திருமணமான பெண்கள் தற்கொலை செய்து கொள்வதைப் பார்த்திருப்போம்... ஆனால், ரீனா மன உளைச்சல் ஆனதற்குக் காரணம், பல்ராம் அவரை பியூட்டி பார்லருக்கு செல்ல மறுத்தது தான்...

தொடர்ந்து ரீனா அடம்பிடித்தும், பல்ராம் செவிசாய்க்கவில்லை... விளைவு, யாரும் இல்லா சமயம் பார்த்து வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் அப்பெண்...

தகவலறிந்து வந்த காவல் துறையினர் ரீனாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்...

மேலும் இச்சம்பவம் குறித்து பல்ராம் யாதவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது...

இந்த மாத துவக்கத்தில் கூட 8ஆம் வகுப்பு மாணவர் சத்ருகன் பதக், சலூனில் தனக்கு சரியாக ஹேர்கட் செய்யாததால் மன உளைச்சலில் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் மகாராஷ்டிராவில்...

இன்னும் இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் ஆங்காங்கே சத்தமின்றி நடந்து கொண்டு தான் இருக்கின்றன... என்றைக்கு அழகை அகத்தில் தேடத் துவங்குகிறோமோ அன்றைக்குத் தான் புற அழகு புறந்தள்ளப்படும்...


Next Story

மேலும் செய்திகள்