பாதி வழியிலே பச்சிளம் குழந்தையோடு தாயை இறக்கி விட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

x

ஓசூரில் குழந்தை பெற்ற பெண்ணை பாதி வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இறக்கி விட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொடகரை கிராமத்தை சேர்ந்த புட்டம்மாவுக்கு கடந்த 8ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு ஓசூர் அரசு மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஆகுழந்தையுடன் புட்டம்மா ம்புலன்ஸ் வாகனத்தில் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர், புட்டம்மாவை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது ஊருக்கு பேருந்து வசதியும் இல்லாததால், புட்டம்மா செய்வதறியாமல் தவித்துள்ளார்

. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இறக்கிவிட்டு சென்ற அதே ஆம்புலன்ஸ் வாகனம் மீண்டும் வந்து, புட்டம்மாவை அழைத்து சென்றது.


Next Story

மேலும் செய்திகள்