செந்தில்பாலாஜி வழக்கில் தீர்ப்பு வாசித்தபோது 3ம் நீதிபதி செய்த செயல்.. வாயடைத்த வக்கீல்கள்.. ஆடிப்போன ஐகோர்ட்

x

அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில், நீதிமன்ற காவல் சட்டப்படியானது என்றும், ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என உத்தரவு பிறப்பித்துள்ளார். கைதுக்கான காரணங்கள் செந்தில் பாலாஜிக்கு தெரியும் என்றும், காலை முதல் அவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் இருந்துள்ளனர் என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என கூறிய நீதிபதி, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். கைது காரணங்களை பெற மறுத்து விட்டு, தரவில்லை என முன்வைத்த வாதம் நிராகரிக்கப்படுகிறது என்றும், கைது செய்ய அதிகாரம் உள்ளது என்றால் காவலில் எடுத்து விசாரிப்பதும் அனுமதிக்கத்தக்கது என நீதிபதி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிரூபிக்கட்டும் என்றும், நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் உடன் படுவதாக மூன்றாம் நீதிபதி கார்த்திகேயன் தமது தீர்ப்பில் கூறியுள்ளார். தீர்ப்பை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு மூன்றாம் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்