பலரது வாழ்க்கையை புரட்டி போட்ட விபத்து... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை - கழுகுப் பார்வை காட்சிகள்
ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. 1000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே இரவு 7 எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்தன. அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்திற்குள்ளானது. சரக்கு ரயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கிய நிலையில், இவ்விபத்தில் 288 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 1000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தின் சூழ்நிலையை கழுகுப் பார்வை வழியாகப் பார்க்கலாம்.