பள்ளி முதல்வரை சுட்ட 12ம் வகுப்பு மாணவன் தலை,வயிற்றில் பாய்ந்த குண்டுகள்

x

உத்தபிரதேசத்தில் பள்ளி முதல்வர் மீது 12ம் வகுப்பு மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதாபூர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், வகுப்பறையில் அமர்வது தொடர்பாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் தலையிட்ட பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா, இரு மாணவர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் முதல்வர் மீது ஒரு மாணவன் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளி வளாகத்திற்கு வந்த மாணவர் அங்கிருந்த முதல்வர் மீது கள்ளத்துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளார். தலை மற்றும் வயிற்று பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து பள்ளிக்கு விரைந்த போலீசார் தப்பி ஓடிய மாணவனை தேடி வருகின்றனர். மாணவனுக்கு துப்பாக்கி கிடைத்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்