"இப்படியே போன... அவ்ளோ தான்..!.."திடீர் விசிட் அடித்த இறையன்பு ஐ.ஏ.எஸ்... - அரண்டு போன அதிகாரிகள்

x

"இப்படியே போன... அவ்ளோ தான்..!.."திடீர் விசிட் அடித்த இறையன்பு ஐ.ஏ.எஸ்... - அரண்டு போன அதிகாரிகள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. பொதுப்பணி துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை, தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று நேரில் பார்வையிட்டார்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 11 இடங்களில் ஆய்வு செய்த இறையன்பு, முதலில் திருவான்மியூரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு ஆகாயத்தாமரை அகற்றும் தூர்வாரும் பணிகள் முடிவடையாமல் இருந்த நிலையில், அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும், தான் மீண்டும் 7 ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது இது சரி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்