3 மாணவர்கள் சேர்ந்து செய்த அந்த காரியம்.. அதிர்ந்த பள்ளி நிர்வாகம் - அடுத்து எடுத்த அதிரடி நடவடிக்கை
விழுப்புரம் அருகே சேராப்பட்டு கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 3 பேருக்கு, பள்ளி நிர்வாகத்தினர் சில தினங்களுக்கு முன்பு, மாற்றுச் சான்றிதழ் அளித்து பள்ளியை விட்டு வெளியேற்றினர். மாணவர்கள் மூவரும் சாராயம் வாங்கியதாக எழுந்த புகாரையடுத்து, பெற்றோரை அழைத்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஒரு மாணவரின் பெற்றோர் மீண்டும் பள்ளிக்கு வந்து, மாற்றுச் சான்றிதழ் மற்றும் மாணவரின் நன்னடத்தை சான்று குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story