பிளாக்பஸ்டர் கொடுத்தாலும் மலையாள சினிமா - தயாரிப்பாளர் சங்கம் சொன்ன அதிர்ச்சி தகவல்
பிளாக்பஸ்டர் கொடுத்தாலும் மலையாள சினிமா - தயாரிப்பாளர் சங்கம் சொன்ன அதிர்ச்சி தகவல்
மலையாளத்தில் வெளியான பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சுமல் பாய்ஸ், ஆடுஜீவிதம், தலைவன், உள்ளொழுக்கு, கிஷ்கிந்தா காண்டம், ஆவேஷம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் குவித்தன. இந்த படங்கள் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. எனினும், நடப்பாண்டில் மலையாள சினிமாவிற்கு 700 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கேரள தயாரிப்பாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. 2024ல் 199 படங்கள் வெளியானதாகவும், அவற்றில் 26 படங்கள் மட்டுமே ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் படங்களின் தயாரிப்பு செலவு 1000 கோடி ரூபாயை தாண்டிய நிலையில், 350 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்ததாக கேரள தயாரிப்பாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
Next Story