காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (26-03-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
தூத்துக்குடி காமராஜர் தினசரி சந்தையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு....காய்கறி சந்தையில் வியாபாரிகளுடன் உரையாடி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு திரட்டினார்....வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த முதல்வர், மீனவர் வீட்டில் தேநீர் அருந்தினார்....
வெள்ள நிவாரணம் தர மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு.... வெள்ள நிவாரணம் கேட்டால் மத்திய அமைச்சர் ஒருவர் பிச்சை என்று ஏளனம் செய்வதாகவும் குற்றச்சாட்டு...
"பாஜகவுக்கு வாக்களிப்பது துரோகம்" - முதல்வர் ஸ்டாலின் பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்...பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழகத்திற்கு வேட்டு என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்....
"அனைவருக்குமான சமூக நீதி வேண்டும்" அனைவருக்குமான சமூக நீதி வேண்டும் என்றால் பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்க வேண்டும்...விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம்...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 29ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரசாரம்...ஏப்ரல் 12 வரை பரப்புரை மேற்கொள்கிறார்...
பாஜகவிடமிருந்து இந்து மதத்தை பாதுகாப்பதே நமது கடமை என திமுக எம்பி கனிமொழி பேச்சு..திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என பழி போடப்படுவதாகவும், திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட பல கோயில்களின் திருப்பணிகள் திமுக ஆட்சியில் நடைபெறுவதாகவும் விளக்கம்...
இரட்டை இலைச் சின்னம் தற்போது துரோகிகளிடம் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு... ஜெயலலிதா இடத்தில் பிரதமர் மோடி இருப்பதாகவும் உருக்கம்...