30 நிமிடத்தில் 58 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (06.04.2023)

x
  • பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி வரும் 8-ஆம் தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 8-ஆம் தேதி சென்னை வரும் அவர், வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடக்கி வைப்பதுடன், மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து, பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றிய பிறகு விமானத்தில் கேரளா செல்கிறார். எனவே, பிரதமரின் வருகையை ஒட்டி 8-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ட்ரோன்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
  • கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக எரியூட்டப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்திருப்பது, மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டம் தோறும் மக்கள் தொகைக்கு ஏற்ப பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • தானும் டெல்டாகாரன் தான் என்றும், டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்றும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடக் கூறி உள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், நிலக்கரி சுரங்கம் பற்றிய செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார். மேலும், மத்திய அமைச்சருடன் டி.ஆர்.பாலு தொலைபேசியில் பேசியுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், கடிதத்துக்கு மதிப்பளிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக கூறினார்.
  • நிலக்கரி சுரங்க விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினால் மட்டும் போதாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் முதல்வராக இருந்தபோது கடிதம் எழுதுவதை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்ததாகவும், ஆனால் தற்போது அவர் கடிதம் தான் எழுதி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், டெல்டா காரன் என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்ததாகவும் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்