14 நிமிடத்தில் 43 செய்திகள் | தந்தி காலை செய்திகள் | Speed News | (30.03.2023)
- ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தையை அச்சிட வேண்டும் என கூறிய மத்திய உணவுப் பாதுகாப்பு ஆணையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் என்றும், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள் என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
- தயிர் பாக்கெட்டுகளில் "தஹி" என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு, பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த ஆணையத்தின் தலைவருக்கு கடிதம் எழுதிய அவர், உடனடியாக அந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
- அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட நகல் வராததால், அந்த நகல் இல்லாமலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மனுதாரர்களின் முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், இன்று விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.
- பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு சட்டசபை நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் கேள்வி நேரத்திலும் விவாதத்திலும் பேசிய அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசி தங்களுடைய பேச்சை தொடங்கினர்.
- தமிழ்நாட்டில் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கட்சி பலவீனமாக இருக்கும் இடங்களில், கூட்டணி தங்களுக்கு கூடுதல் பலம் தருகிறது என்றும், தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.
Next Story