15நிமிடத்தில் 48 செய்திகள் |தந்தி இரவு செய்திகள்
- ராகுல்காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கை, அதானி குழும முறைகேடு விவகாரம் காரணமாக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர்...
- கூச்சல் குழப்பம் நிலவியதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
- அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை கைவிடாமல், மாற்றியமைத்து செயல்படுத்தி வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
- தாலிக்கு தங்கம் திட்டத்தை 4 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில், இத்திட்டத்தை புதுமைப்பெண் திட்டம் என மாற்றி அறிவித்ததாக குறிப்பிட்டார்.
- ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது...
- முன்னதாக மார்ச் 30 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது
- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளம் தற்காலிகமாக செயலிழந்ததால், தரிசன டிக்கெட், தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
- இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறுகள் விரைவில் சரிசெய்யப்பட்டு மீண்டும் செயல்படத் தொடங்கும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய பாஜக அரசைக் கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
- ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பின் மூலம் பிரச்சினைகளை திசை திருப்ப பாஜக அரசு துடிப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்...
Next Story