தந்தி செய்திகள் SHORT NEWS | SPEED NEWS | (21.11.2022)

x

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...நாளை மறுநாள் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் தகவல்.

வடிகால் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு விட்டது...மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்...தண்ணீர் பிரச்சினை வராத அளவுக்கு மழை பெய்வதாக மகிழ்ச்சி.

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது...சமூக நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து...இடஒதுக்கீட்டுக்கான நெடும்பயணத்தின் முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், ஒடுக்கப்பட்டோர் நலனைக் காக்க உறுதியேற்போம் என ட்வீட்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனிக் கட்சி தொடங்க முயற்சிக்கிறார்...தந்தி டிவி நேர்காணலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு...அதிமுக அழிய வேண்டும், பாஜக ஜெயிக்கவே கூடாது என ஈபிஎஸ் நினைப்பதாகவும் தினகரன் குற்றச்சாட்டு.

ஆட்டோ வெடி விபத்தில் பேட்டரி, வயர்கள் கொண்ட சர்க்யூட் அமைப்புடன் கைப்பற்றப்பட்ட குக்கர்...ஆட்டோவில் இருந்து ஒரு அடையாள அட்டையும் சிக்கியது...பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள சம்பவம் குறித்து தொடரும் விசாரணை...

கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலி...சென்னையில் 4 இடங்களில் மாநகர காவல்துறை நடத்திய சோதனை...11 பென்-டிரைவ், 7 செல்-போன், 2 ஹேண்டி கேமரா மற்றும் சில மின்சாதனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தகவல்.







Next Story

மேலும் செய்திகள்