15 நிமிடத்தில் 40 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (31.03.2023)

x
  • ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, ஆயிரத்து 31 கோடி ரூபாய் நிதி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை, ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த 3 ஆயிரத்து 414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தனிநீதிபதி தீர்ப்பு முன்னுக்குபின் முரணாக இருப்பதாகவும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர தடை விதிக்க வேண்டும் எனவும் மேல்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.
  • சட்டப்பேரவையில் வழக்கமாக அதிமுக சார்பில் பேசுவதாக கூறும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அதிமுக என்ற பெயரையே தவிர்த்து பேசினார். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா அறிவிப்பை வரவேற்று பேசிய அவர், ஜெயலலிதாவின் சமூக நீதி செயல்களுக்கு அடித்தளம், பெரியார் என பெருமிதம் தெரிவித்தார்.
  • அனைவரும் ஒன்றாக சேர்ந்து மக்கள் பணியாற்றுமாறு அதிமுக வினருக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மக்கள் பிரச்சினைகள் தீர்க்க கருத்துகள், ஆலோசனைகளை வழங்கலாம் என்றார்.
  • அதிமுக அரசு 10 ஆண்டுகளில் குடிநீர் திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்த நிலையில் 20 மாதங்களில் திமுக அரசு 38 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய அவர், புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளிலும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்