தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (05.11.2022)
சென்னையில் 2-வது விமான நிலையம் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து101-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி, விமான நிலைய திட்டத்தினை கைவிட வேண்டும் என்று கோஷமிட்டனர்
அரசியலில் தாம் அமைதியாக இருப்பதால் தனது உழைப்பு யாருக்கும் தெரியவில்லை என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
உதவி கேட்டவர்களின் பெயரை இதுவரை தாம் வெளியே சொல்லியது இல்லை எனவும் இனிமேலும் சொல்ல மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் ஜொலிப்பது கடினம் என்றும் சினிமாவில் எளிதாக வந்து விட முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், தெருவில் நின்று பலவற்றை பார்த்து படிப்படியாகத்தான் வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியீட்டின்போது ஏற்பட்ட பிரச்சினைக்கு உதவியது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மனம் திறந்தார்.
இப்பிரச்சினைக்கு ஞாயிற்றுக்கிழமை நாளில் அதிகாரிகளை ஒருங்கிணைத்து தீர்வு கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது, இவ்வளவு பெரிய பொறுப்பை இவர் எப்படி செய்வார் என்று சந்தேகப்பட்டதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஒரே வருடத்தில் தான் சிறந்த நிர்வாகி என்பதை அவர் நிரூபித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்தது தவறு என சசிகலா தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்...
வழக்கு விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைப்பு
பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது, வர முடியாது என்று, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கருத்து
தொண்டர்கள் முடிவு செய்யும் காலம் வந்து விட்டதாகவும் அவர் பேச்சு