Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-03-2023) | Morning Headlines | Thanthi TV

x

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அமைச்சர் ​கணேசன் திட்டவட்டம்...

தவறான உள்நோக்கத்துடன், வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி பரப்பப்படுவதாகவும் விளக்கம்....

----

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கான உதவி எண்களை அறிவித்தது, காவல்துறை...

வட மாநிலத்தவர் தொடர்ந்து தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நடவடிக்கை...

-----

கோவையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பு...

சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி வெளியேறுவதால் தொழில் பாதிப்பு என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கவலை...

----

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணி செய்கிறார்கள்....

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உறுதி...

----

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி, பீகார் சட்டப்பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளி...

பீகார் மக்கள் தாக்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டு...

-----

பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறுவது வதந்தி என தமிழக டிஜிபி நிராகரித்து விட்டார்...

பீகார் சட்டப்பேரவையில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கம்...

---

தமிழகத்தில் வட மாநிலத்தவர் பாதுகாப்பாக இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதி...

பீகார் மாநில பாஜக தலைவர், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல்...

---

ஈரோட்டு திராவிடப் பாதை இந்தியாவிற்கே வழிகாட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை....

இன்று ஈரோடு, நாளை நம் நாடு என்ற வெற்றிப் பயணம் தொடரும் என்றும் நம்பிக்கை...



Next Story

மேலும் செய்திகள்