தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (23.12.2022)
BF 7 உருமாறிய கொரோனா பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடக்கம்....சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்...சீனா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், தென் கொரியாவில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய முடிவு.
கோவை விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை...விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் தகவல்...நோய் அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தகவல்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மூக்கு வழியில் செலுத்தப்படும் நாசி மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்...பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மருந்தை முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைக்கு அனுமதி...இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படுகிறது.
புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்...மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்...வழக்கமான கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தல்.
தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசை அவமதிப்பாக கருதுகிறோம்...நாம் தமிழர் கட்சி தலைமை
வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் முதலாம் திருநாள்...மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்...